Friday, December 4, 2015

MAGENDRAVADI



மகேந்திரவாடி ஏரி, நிரம்பி வழிவதை காண, சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டோ, வேன்களில் வந்து செல்கின்றனர். திடீர் சுற்றுலா தலமாக மாறியுள்ள இங்கு, மக்காசோளம், சுக்கு காபி விற்பனை செய்யும் வியாபாரிகளாக விவசாயிகள் மாறியுள்ளனர்.
இதன் வடக்கு கரையில், மதகு காத்த அம்மன் கோவில் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்க்கிறது. வேலுார் மாவட்டம் சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து, 5.கி.மீ., காவேரிப்பாக்கத்தில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ளது இந்த கடல் போன்ற ஏரி.
பல்லவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரியின் அருகே, வரலாற்று சிறப்பு மிக்க, குடவறை கோவில் அமைந்துள்ளது.

Monday, December 15, 2014

அந்த 652 பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாணவர்களா?

ஞாபகம் இருக்கிறதா?

காலியாக இருக்கும் 1440 கணினி ஆசிரியர்  பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள், நிரப்ப வேண்டும் என கோர்ட் உத்தரவு இட்டது. இது நடந்தது 2013ல்...

இப்ப, 2015 ஜனவரி வந்து விட்டது. அதாவது 16 மாதங்களுக்கு  முன், இதில், இரண்டு கல்வியாண்டுகள் ஓடிவிட்டன. ஆசிரியர்களே இல்லாமல், இரண்டு ஆண்டு கணினி பிரிவு மாணவர்கள் தட்டு தடுமாறி, தேறினார்களோ, திசைமாறினார்களோ தெரியாது.

இந்நிலையில், தற்போது, கோர்ட் உத்தரவை நிறைவேற்றும் முயற்சியில், கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதாவது,  652 பணியிடங்களை மட்டும் நிரப்ப, சான்றிதழ் சரிப்பார்ப்பு நடத்தப்படும் என தேர்வு வாரியம் அறிவி்த்துள்ளது. இதற்கான பதிவுமூப்பு பரிந்துரை பட்டியலில், உள்ள குளறுபடிகளை தினசரி நாளேடுகள் சுட்டிக்காட்டியபோதும், அதை சரி செய்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை.
இது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1440 காலி இடங்களுக்கு தேர்வு செய்யும் பணி நடக்கிறதா என்றால், அதுவும் இல்லை. வெறும் 652 இடங்களை மட்டும் நிரப்பப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 652 பள்ளிகளில் படிப்பவர்கள் தான் மாணவர்களா? மீதமுள்ள 788 பள்ளிகளில் கணினி  ஆசிரியர்கள் இல்லாமல் கணினி பிரிவில் படித்து வரும் மாணவர்களின் நலனை யார் பாதுகாப்பது?

Saturday, December 13, 2014

என்னதான் நடக்கிறது கணினி ஆசிரியர்களின் நியமனத்தில்...?

கணினி ஆசிரியர்களை குழப்பும் விதமாகவும், தங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்து கொள்ள விரும்பாத அரசு எந்திரங்களை எதிர்த்து போராட வலுவாக அமைப்பு தேவை.

652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்து விட்ட நிலையில், தற்போது, புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், கணினி பட்டதாரிகளை காட்டிலும், இதர பட்டதாரிகள் அதாவது இயற்பியல், கணிதம், உயிரியல் பட்டதாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதை மாற்றி வெளியிட வேண்டும் என, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஓராண்டாக அரசு பள்ளிகளில் கணினி ஆசிிரயர்கள் இல்லாமலும், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலும், தற்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுமுறை முடிந்து, ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் செயல்பட துவங்கும். துவங்கியதும், பிராக்டிகல் தேர்வு நடத்தப்படும், பிப்ரவரியுடன் பிளஸ்2வுக்கு வகுப்புகள் முடிந்து விடும்.இந்நிலையில், புதிதாக, பிடிஏ மூலமாக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அரசு உத்தரவு போட்டுள்ளது. இதனால், கணினி ஆசிரியர்கள் மதுரை கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு மற்றும் பரிந்துரை பட்டியலில் உள்ள குளறுபடி காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரும் 19ம் தேதி, கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சான்றிதழ் சரிபார்ப்பு குறி்தது,. மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான கூட்டம் சென்னையில் நடத்தப்பட உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
ஏன் இத்தனை குழப்பம். என்னதான் நடக்கிறது கணினி ஆசிரியர்களின் நியமனத்தில்...?

Sunday, November 9, 2014

அரசமரத்தடியில் துவங்கியது புதிய சங்கம்

அரச மரத்தடியில் துவங்கியது புதிய சங்கம்

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிிரயர்களின் ஆலோசனை கூட்டம் இன்று திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, ஆர்.கே.பேட்டை வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பழனி மற்றும் தொலைதொடர்பு துறை தியாகராஜன் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினர். 


அரசமரத்தடியில் நடந்த கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த சிறப்பு விருந்தனர்களுக்காக, அருகில் உள்ள மண்டபத்தில் சென்று இரண்டு இருக்கைகள் கடனாக பெற்று வந்து அமரச் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.

மிக எளிமையாக நடந்த கூட்டமானாலும், மிக சிறப்பாக நடந்தது. திரு. பழனி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏளனங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு, தற்போது இந்த நிலைக்கு வந்தது குறித்து பேசினார். இதில் தன்னலம் துளியும் இல்லை. 4,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து தான்,மாநில தற்காலிக உதவியாளர்கள் சங்கம் துவங்கி அதன் மூலம் போராடி பெற்ற உரிமைகளை நினைவு கூர்ந்தார்.
மேலும், கடமையை செய்யுங்கள், பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ள நான் உதவுகிறேன் என்று கூறி சங்கம் அமைக்கவும் அதை இன்றே இ்பபோதே துவங்குங்கள் என்று கூறி, தலைவர் பொருளாளர் என, 20 பேரை தேர்வு செய்து நியமனம் செய்து வைத்தார். 

காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 2:00 மணிக்கு நிறைவடைந்தது. வளமான எதிர்காலத்திற்கு முதல் படியை மிதித்த திருப்தியுடன் ஆசிரியர்கள் பிரிந்து சென்றனர்.

Wednesday, November 5, 2014

அதே 5,000த்தில் நிலை கொண்டுள்ளது



www.facebook.com/computertrl

ஏழுமலை பாண்டியன்

https://www.facebook.com/groups/1478641355757447/

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள்

பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், பொதட்டூர்பேட்டையில் இன்று காலை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்களின் உள்ள குமுறல்களை, வேதனையுடன் வெ ளிப்படுத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்த சம்பள்தில் வேலை செய்துவரும் தாங்களுக்கு சம்பள உயர்வு இல்லை, பணி நிரந்தரம் இல்லை, பணியிட மாறுதல் மறுக்கப்படுகிறது என அடுக்கடுக்காக புகார்களை அடுக்கினர்.

மேலும், கடந்த மூன்று ஆண்டில், பால் விலை இரண்டு முறை, பஸ் கட்டணம் இரட்டிப்பு, பெட்ரோல் விலை பலமுறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் மட்டும் அதே 5,000த்தில் நிலை கொண்டுள்ளது

பகுதிநேர வேலை நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளி மற்றும் நிறுவனங்களில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டுவந்து, தற்போது ஐந்தாயிரத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் திணறி வருகிறோம்.
அட 100 நாள் வேலைக்காவது போகலாம் என்றால் அதற்கும் முடியாது. இப்படி உண்மையிலேயே வறுமைகோட்டிற்கு கீழே உள்ள எங்களை அரசாங்கம் என்றைக்கு கரையேற்றும் என கண்ணீர் சிந்தினர்.

அடுத்த கட்டமாக, வரும் 9ம் தேதி, திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் கூட்டம் நடத்தி, சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Monday, March 3, 2014

உங்கள் ஓட்டு யாருக்கு...?



பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகள் தங்களின் கோரிக்கையை வலிமையான(வன்மையான) முறையில் அரசுக்கு தெரிவிக்க தயங்குகின்றனர். அரசின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும் என அச்சப்படுகின்றனர்.
அரசியல்வாதிகளை போன்று வாழ்த்து தெரிவிப்பது, நன்றி தெரிவிப்பது, பேனர் வைப்பது போன்ற செயல்களுடன் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளலாம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர்.

நம் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, நமக்கு பதில் அளித்திருக்கும்.
பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகள் தமிழகம் முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக மனு அளித்து வருகின்றனர். இது குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி வருகிறது.

ஊடகங்கள், மற்றும் அரசு இயந்திரங்கள் மூலமாக, நமது கோரிக்கைகள் அரசை நிச்சயமாக சென்றடைந்திருக்கும். இருந்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கு காரணம் என்ன?

மாவட்ட அளவில் மனு அளிக்க சென்றவர்கள் 50க்கும் குறைவு. இவர்களால் நமக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பது அரசுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்து விட்டது.

கணினி பட்டதாரிகள் 15,000
பகுதி நேர ஆசிரியர்கள் 16,500

மொத்தம் உள்ள 31,500 பேரில் கோரிக்கை விடுப்பவர்கள், 1000 பேர் கூட கிடையாது.

ஒரு ஆயிரம் பேருக்காக, 31,500 பேருக்கு மாத சம்பளாக பெரும் தொகையை செலவிட வேண்டிய அவசியம் இல்லை என அரசு நினைப்பதில் நியாயம் உள்ளதா இல்லையா...

இந்த 31,500 பேருக்கு குடும்ப நபர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் என, ஒவ்வொருவருக்கும், 100 வாக்காளர்களை கவர முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

Friday, February 28, 2014

‘வாழ வைத்தால்... ஆள வைப்போம்...’

ரகசிய கூட்டம்!
––––––––––––––––
மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அடுத்தகட்டமாக, நமது பலத்தை, ––––––––––––––––––––ல் வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இது குறித்து நமது நிலையை தெளிவுபடுத்த, வரும் ஞாயிறுக்கிழமை(02/03/14) அன்று, திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில், ரகசிய கூட்டம் நடைபெற உள்ளது. இதில், எந்தவிதமான பாகுபாடும் இன்றி, கணினி பட்டதாரிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

மனுக்கள் நிராகரிப்பு?

மனுக்கள் நிராகரிப்பு?
––––––––––––––––––––
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்த, அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி பட்டதாரிகளின் மனுக்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால்  நிராகரிப்பு!
அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என பதில் அளிக்கப்பட்டுள்ளது.


********************************
 இந்த கொள்கை முடிவுக்கு உட்பட்டது என்பதை, யார் கண்டு பிடிச்சது...?
அப்படி என்னதான் உங்களின் கொள்கை, அதையாவது சொல்லுங்க?

Monday, February 17, 2014

புலி வருது... புலி வருது... வந்தே விட்டது!

திருவள்ளூர் மாவட்ட கணினி பட்டதாரிகள் கூட்டமைப்பு தங்களின் பணி வாய்ப்பு குறித்து அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என கடந்த 20 நாட்களாக தீவிர முயற்சியி்ல் ஈடுபட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று வாரங்களாக, ஆர்.கே.பேட்டையில் கூட்டங்களை நடத்தியது.
இதில், பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றின.

கணினி பட்டதாரிகள்,
பகுதி நேர கணினி ஆசிரியர்கள்
அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்

என பல பிரிவுகள் உதயமாகின.

இதனால், ஒருங்கிணைப்பாளர் ஒதுங்கினார்.


இருப்பினும், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அளித்த உறுதிமொழியின் படி,

நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் தங்களின் வேலை வாய்ப்பு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு மனுக்கள் இருவர் தலைமையில் அளிக்கப்பட்டன.

கணினி பட்டதாரிகள் சார்பில் மணிகண்டன்,
அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் வெங்கடேசன் தலைமையிலும்
மனுக்கள் வழங்கப்ட்டன.
இருதரப்பிலும், ஆண்கள், பெண்கள் என தலா 70 பேர் வந்திருந்தனர். வந்திருந்தவர்களுக்கு மனு அளித்ததும், பத்திரிகை மற்றும் கலைஞர், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியானதில் முழு திருப்தி.

இன்றைய நடவடிக்கை ஒருங்கிணைப்பாளருக்கும், அவருடன் முழு அளவில் போராடியவர்களுக்கும் திருப்தி.

இந்த முதல் முயற்சிகக்கு பின், அடுத்த நடவடிக்கை என்ன? அப்போது என்பது தான் வந்திருந்த அனைவரின் கேள்வியாக இருந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையின் போது, .மேலும்  பலர் ஆர்வமாக கலந்து கொள்ள தயாராக உள்ளனர்.
அந்த அளவில், இன்றைய நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
வருகை தந்து பங்கேற்ற அனைவருக்கும் நன்றி... நன்றி...
இன்றைய நிகழ்ச்சிக்கான செலவுத்தொகையை ஏற்றுக்கொண்ட நண்பர் அய்யப்பன்(அம்மையார்குப்பம், அரசு மேல்நிலைப்பள்ளி பாலாபுரம்)  அவர்களுக்கும் நமது கூட்டமைப்பின் சார்பில் நன்றி.

Saturday, February 15, 2014

மவுனம் கலைகிறது!




திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் நடந்த கணினி பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் எடுத்த தீர்மானங்கள், தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் கலெக்டரிடம் அளிக்கப்பட உள்ள மனுவில் இந்த தீர்மானங்கள்  இடம் பெற்றுள்ளது.

நாளை திண்டுக்கல், விழுப்புரம், கரூர், பெரம்பலுார், கோவை உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கணினி பட்டதாரிகள் மனு அளிக்க உள்ளனர்.
இந்நிலையில், முன்னோடியாக செயல்பட்ட திருவள்ளூர் மாவட்டம் சும்மா இருப்பதா என நம் நண்பர்கள் புலம்பி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையின் பேரில், 16/02/14 அன்று காலை மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்று மனு அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், கணினி பி.எட்., பட்டதாரிகள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள்( கணினி மட்டும்) கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெளிவாக, முடிவாக அறிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Wednesday, February 12, 2014

அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்!




திருவள்ளூர் மாவட்ட கணினி பட்டதாரிகள் கூட்டமைப்பு என்ற பெயரில் கடந்த 2ம் தேதி நடந்த கூட்டத்திற்கு அனைவரையும் ஒருங்கிணைத்தவர் M.sc., B.ed., computer science பட்டதாரி,
ssa பகுதி நேர ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகிறார்.

 2ம் தேதி நடந்த கூட்டத்திற்கு கணிசமான பட்டதாரிகள் வந்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் கூட...்டத்தில் தங்கள் கருத்துக்களை பேச முன்வரவில்லை.

கூட்டத்திற்கு வந்திருந்த cs b.ed., பட்டதாரிகளின் கருத்து:
பகுதிநேர கணினி ஆசிரியர்கள் தங்களின் பணியை நிரந்தரம் செய்து கொள்வதற்கு, தங்களை பயன்படுத்திக்கொள்கின்றனர் என அதிருப்தி அடைந்துள்ளனர்.

பகுதி நேர ஆசிரியர்களின் கருத்து:

 கணினி பட்டதாரிகள் அவர்களின் வேலை வாய்ப்புக்கு தங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர் என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


இந்த கருத்துக்கள், 9ம் தேதி நடந்த இரண்டாவது கூட்டத்திற்கு பின் தெரியவந்துள்ளது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் பகுதி நேர ஆசிரியராகவும், கணினி பட்டதாரியாகவும் இருப்பதும், கூட்டத்தில் அதிகமான நேரம் அவரே பேசியதாலும் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கடந்த இரண்டு வாரங்களாக கூட்டம் நடத்தி, அதை தமிழகம் முழுவதும் பரபரப்பாக செய்தியாக்கிய அந்த நபர், தனது அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகுகிறார்.

இனி, யாராவது திருவள்ளூர் மாவட்ட பகுதிநேர மற்றும் கணினி பட்டதாரிகள் குறித்து ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால், அது குறித்து அவருக்கும் தகவல் தர கேட்டுக்கொண்டுள்ளார். மாவட்டத்தின் எந்த பகுதியில் கூட்டம் நடந்தாலும் அவர் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்.

குறிப்பு: வரும் திங்கள் அன்று(17/02/14) திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் திட்டமும் கைவிடப்படுகிறது. computertrl@gmail.com

Tuesday, February 11, 2014

திருவள்ளூர் ஆட்சியரை சந்திக்க முடிவு

திருவள்ளூர் மாவட்ட அனைத்து கணினி பட்டதாரிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் வரும் திங்கள் (17/02/14) அன்று காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களின் வேலை வாய்ப்பு குறித்து மனு அளிப்பது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள கணினி பட்டதாரிகள் மற்றும் அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள், திருவள்ளூருக்கு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட அளவிலான இந்த முதல் முயற்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நல்க வேண்டும். அதாவது தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
வேலை வழங்க வேண்டும், என கணினி பட்டதாரிகளும், இரண்டு ஆண்டுகளாக தற்காலிகமாக பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என இரண்டு மனுக்கள் அளிக்கப்பட உள்ளது. அதில், நமது கோரிக்கைகள் இடம் பெற்றிருக்கும்.
மனு அளிப்பது மட்டுமே, அன்றை நடவடிக்கை. மற்றபடி, போராட்மோ, ஆர்ப்பாட்டமோ எதுவும் கிடையாது. எனவே, எந்தவிதமான தயக்கமும் இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு, computertrl@gmail.com

Monday, February 10, 2014

கலகம் இல்லாத சங்கம் எங்கே இருக்கிறது?

கூட்டமைப்பை கலைத்துவிடலாமா... என்ற கடந்த போஸ்ட் வெ ளியான  சிறிது நேரத்திலேயே, நண்பர்கள் பலரும் தொடர்பு கொண்டு, வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
கூட்டமைப்பு கலைக்கப்பட மாட்டாது. காய்த்த மரம் தான் கல்லடி படும். கலகம் இல்லாத சங்கம் எங்கே இருக்கிறது. கூட்டமைப்பு தொடரும் என்பதை கணினி நண்பர்கள் ்னைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆதரவுக்கு நன்றி... நன்றி... நன்றி...

காட்டுத்தீ.... பூகம்பம்.... புஸ்வாணம்...!


பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஒருவர்  முன்வந்தார். திருவள்ளூர் மாவட்ட கணினி பட்டதாரிகளை ஒருங்கிணைத்து, குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரை பலவீனப்படுத்தும்விதமாக, அந்த கூட்டமைப்பை கூரு போட பலர் தயாராகி வருகின்றனர்.
அதனால், சங்கத்தை உடனடியாக கலைச்சுடலாம் என வடிவேலு பாணியில் முற்பட்டு, இந்த போஸ்ட்டை டைப் செய்யும் நேரத்தில், திருத்தணியில் இருந்து நண்பர் சந்தோஷ் அலைபேசியில் தொடர்பு கொண்டு, அவசரப்பட வேண்டாம். நான் பக்கபலமாக இருக்கிறேன். தொடர்ந்து போராடலாம் என தோள் கொடுக்க முன்வந்தார்.
அதன் பேரில், கூட்டமைப்புக்கு, குளுக்கோஸ் ஏற்றும் பணி நடந்து வருகிறது.

02/02/14 அன்று நடந்த கூட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்ட விஷயம் என்ன?

கணினி பட்டதாரிகள்
கணினி பி.எட்., பட்டதாரிகள்
கணினி எம்.சி.ஏ., பி.எட்.,
கணினி பகுதிநேர ஆசிரியர்கள்
கணினி டிகிரி மட்டும்
கணினி பட்டயம் மட்டும்
என கணினி சம்பந்தமான அனைத்து கல்வித்தகுதிகளையும்  உள்ளடக்கிய கூட்டமைப்பு இது.
 நம் அனைவரின் வேலை வாய்ப்பு குறித்து கோரிக்கை விடுக்கவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில், நமக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசக்கூடாது.
பேச நினைக்கும் அனைவரும் வந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெளிவாக கூறப்பட்டது.

பூகம்பத்தை வெடிக்கச் செய்தது யார்?

கூட்டத்திற்கு நேரில் வராமல், இது நமக்கான கூட்டம் இல்லை. இது பகுதி நேர ஆசிரியர்களுக்கானது எனவும்,
பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் எனவும்,
கிராஸ் மேஜர் டிகிரி வித் கணினி டிப்ளமோவுக்கு இல்லை எனவும் பலவாறு திரித்து வதந்திகள் பரப்பி விடப்பட்டு வருகிறது.

கூட்டத்திற்கு வந்தவர்களும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களை கூற தயங்கினர். இப்படி வீட்டில் இருந்து கொண்டு இணையத்தில் தகவல்களை  பார்த்து தெரிந்து கொள்ளலாம் என பலர் நினைப்பதாலும், குறைந்த அளவில் கூடிய கூட்டத்தில் பேசாமல் இருந்து விட்டு, பின்னால் புலம்புவதாலும், பூனைக்கு  மணி கட்டிய அந்த எலி, மிகவும் சோர்ந்து போயுள்ளது.


இந்த தளத்தின் வாயிலாக கணினி ப்டடதாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தெரிந்து கொள்ள காத்திருக்கும் இதர மாவட்ட அமைப்பினர், திருவள்ளூர் மாவட்டத்திற்காக  காத்திருக்காமல் உங்களின் நடவடிக்கையை தொடர அந்த எலி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

pandiyanve@gmail.com
computertrl@gmail.com
8148917745

Sunday, February 9, 2014

போற்கொடி!

கணினி பட்டதாரிகள் தங்கள் வேலை வாய்ப்பு குறித்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
நேற்று ஆர்.கே.பேட்டையில் நடந்த கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்களாக உள்ள கணினி பி.எட்., பட்டதாரிகள் மட்டும் தங்களுக்காக இந்த கூட்டத்தை நடத்துவதாகவும், இதில் தங்களை புறக்கணிப்பதாக இதர பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் கிராஸ் மேஜர் கணினி பி.எட்., பட்டதாரிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
பலரும் மனஸ்தாபத்தில் உள்ளனர். அடுத்தவரின் வேலையை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கண்டிப்பாக உண்டு.
யாரையும் முன்னிலைப்படுத்தவோ, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் தரவோ இந்த கூட்டம் நடத்தப்படவில்லை.
வரும் 17ம் தேதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கணினி பி.எட்., பட்டதாரிகள், கணினி பகுதிநேர ஆசிரியர்கள் அல்லது அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் தனித்தனியாக அல்லது கூட்டாக ஒரே மனுவாக அளிக்கலாம் என பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

கணினி பி.எட்., பட்டதாரிகள்

பகுதிநேர கணினி ஆசிரியர்கள்

அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் என மூன்று பிரிவுகள் நேற்றைய கூட்டத்தில் தோன்றியுள்ளது.

இதனால், முடிவு எட்டப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.
தீர்ப்பு உங்கள் கையி்ல்...

Saturday, February 8, 2014

காட்டுத்தீயின் அடுத்த க(கூ)ட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் கடந்த ஞாயிறு(02/02/14) அன்று நடந்த கூட்டம் எதிர்பார்த்தது போன்று தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நாளை (09/02/14) அடுத்த கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டவர்களும், தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்து கொள்ளாதவர்களும் மீண்டும் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

இந்த ஒரு வார காலத்தில் நாம் எதிர்கொண்ட தகவல்களையும், தமிழகம் முழுவதிலும் இருந்து எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களையும் விவாதிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

சிரமம் கருதாமல் அனைவரும் வந்து பயன் பெற வேண்டுகிறோம்.

நேரம் : காலை 10:30 மணி
இடம்: ஆர்.கே.பேட்டை
தொடர்புக்கு: 8148917745, 7373892058, 9786906275, 9840772600
computertrl@gmail.com

கூட்டணி தான்; பிரிவினை இல்லை


கடந்த பல ஆண்டுகளாக சங்கம் அமைத்து மாநிலம் முழுவதும் பல போராட்டங்கள், வழக்குகளை சந்தித்து வரும் நமது சீனியர்களுக்கு, போட்டியாக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறு.
 
கணினி பட்டதாரிகளின் இன்றைய நிலை குறித்த அவசர அவசியம் கருதி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்துவதற்காக அச்சிடப்பட்ட பேனர் தான் நீங்கள் மேலே காண்பது.
இதில், எந்தவிதமான உள்நோக்கமோ, பிறர் மனதை காயப்படுத்தும் எண்ணமோ இல்லை. மேலும், இதில், தலைவர், செயலர், பொருளாளர் என எவரும் இல்லை.

திருவள்ளூரில் கணினி பட்டதாரிகளை ஒருங்கிணைத்து இதுவரை எந்த சங்கமும் ஏற்படுத்தப்படவில்லை. கடந்த வாரம் நடத்திய கூட்டத்திற்கு பின், இதுவரை எங்களிடம் 450 பட்டதாரிகளின் தொடர்பு விவரங்கள் கிடைத்துள்ளது. நாளை அவர்களின் இ–மெயிலுக்கு அனுப்ப உள்ள தகவல் மூலம், இந்த விவரம் அனைவருக்கும் (450) கிடைக்கும்.

எந்தவொரு அமைப்பு அல்லது சங்கத்தில் இணைந்து செயல்பட்டவும் நாங்கள் தயார். கணினி பட்டதாரிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பது மட்டுமே நமது அனைவரின் நோக்கம். இணைந்து செயல்படுவோம். வெற்றி நிச்சயம்.
விரைவில் இந்த பேனர் படம் மாற்றப்படும்.
computertrl@gmail.com
http://tamilnadu-aasiriyar.blogspot.in/
See more

Friday, February 7, 2014

கலெக்டர் அலுவலகம் நோக்கி கணினி பட்டதாரிகள்

 
 
மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் கணினி பட்டதாரிகள் கூட்டாக மனு அளிக்கலாம் என்ற கருத்து ஏற்புடையதாக தெரிகிறது.

இதன் மூலம் அரசுக்கு நமது கோரிக்கையை தெரிவிப்பது சிறந்தது.
இந்த மாதத்தில் எந்த நாள் ...என்பதை முடிவு செய்வதற்கு முன், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கணினி பட்டதாரிகள் ஒன்று சேர வேண்டியது அவசியம்.
மாவட்ட கணினி பிட்., பட்டதாரிகள் முகநுால் அட்மின்கள் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு, விரைந்து ஒன்றிணைக்க கோருகிறேன்.
computertrl@gmail.com
http://tamilnadu-aasiriyar.blogspot.in/